2022 - 2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் - நிதியமைச்சர் இன்று ஆலோசனை!

திங்கள், 21 பிப்ரவரி 2022 (10:04 IST)
தமிழக பட்ஜெட் தொடர்பாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று ஆலோசனை நடத்துகிறார் என தகவல். 

 
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போதே தமிழக வரலாற்றில் முதல் முறையாக விவசாய பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யப்பட்டது. கடந்த நிதியாண்டின் எஞ்சிய 6 மாதங்களுக்கு மட்டுமே அந்த பட்ஜெட் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 
 
இந்நிலையில் 2022 - 2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தொடர்பாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று ஆலோசனை நடத்துகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை 11.30 மணிக்கு தொழிற்சாலை, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் ஆலோசிக்கிறார். இதனைத்தொடர்ந்து தலைமைச் செயலத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு வர்த்தக சங்க பிரதிநிதிகளுடனும் நிதியமைச்சர் ஆலோசனை நடத்துகிறார்.
 
எனவே இந்த நிதி ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் தாக்கல் குறித்த் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்