நாளை மறுநாளுடன் முடிவடைகிறது பிரச்சாரம்: அரசியல் தலைவர்கள் தீவிர ஓட்டுவேட்டை!

வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (09:11 IST)
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து அதிமுக திமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தற்போது தீவிரமாக தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றன என்பது தெரிந்ததே இந்த நிலையில் நாளை மறுநாள் உடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் ஐந்து கூட்டணிகள் போட்டியிடுகின்றன. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் கூட்டணி, அம்மா மக்கள் முன்னேற்ற கழக கூட்டணி மற்றும் சீமானின் நாம் தமிழர் கூட்டணி என ஐந்து கூட்டணிகள் போட்டியிடுகின்றன. இதில் முக ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, கமல்ஹாசன், டிடிவி தினகரன் மற்றும் சீமான் ஆகிய ஐந்து முதல்வர் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வரும் நிலையில் நாளை மறுநாளுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் ஏப்ரல் 4ஆம் தேதி இரவு 7 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடையவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது 
 
வழக்கமாக கடைசி தினத்தில் மாலை 5 மணி வரை மட்டுமே பிரச்சாரம் செய்ய அனுமதிக்கப்படும். ஆனால் இம்முறை கூடுதலாக 2 மணி நேரம் தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுமதி அளித்துள்ளதை அடுத்து இரவு ஏழு மணியுடன் பிரச்சாரம் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடைசி கட்ட தேர்தல் பிரச்சாரத்தை அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்