10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா? – அரசு ஆலோசனை செய்வதாக தகவல்

வெள்ளி, 27 மார்ச் 2020 (11:44 IST)
கொரோனா பாதிப்பால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அவை ரத்து செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் 10ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் மார் 26ம் தேதி நடைபெற இருந்தது. தற்போது கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஏப்ரல் 15ல் தேர்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பிறகு பிரதமர் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தியதை தொடர்ந்து ஏப்ரல் 14 வரை தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஏப்ரல் 15ல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மாநில அளவிலான பொதுத்தேர்வு திட்டத்தை ரத்து செய்து, அதை மாவட்ட அளவில் மாற்ற கல்வித்துறை பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் ஏப்ரல் 10ம் தேதிக்குள் கொரோனா கட்டுக்குள் வராவிட்டால் முந்தைய காலாண்டு, அரையாண்டு தேர்வு முடிவுகளை ஒட்டி தேர்ச்சிகளை அறிவிக்கலாம் என்ற பேச்சும் எழுந்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்