வழக்கமாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் மாதத்தில் நடைபெறும் நிலையில் இந்த ஆண்டு கொரோனா காரணமாக மே 3ம் தேதி தேர்வுகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்கு எண்ணும் பணி மே 2ம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ள நிலையில் தேர்தல் முடிவுகளுக்கு அடுத்த நாளே பொதுத்தேர்வை நடத்துவதில் சிரமம் உள்ளதாக கூறப்படுகிறது.