அந்த 6 நிறுவனங்களும் ஜெயலலிதா பினாமி நிறுவனங்கள் தான் - சொல்வது கர்நாடகா வழக்கறிஞர்

புதன், 8 ஜூன் 2016 (15:30 IST)
ஜெயலலிதாவுக்காக அந்த 6 நிறுவனங்களும் பினாமியாகவே செயல்பட்டதாக கர்நாடகா அரசு வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா குற்றம் சாட்டினார்.
 

 
வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேர் விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. 
 
இந்த நிலையில், ரிவர்வே அக்ரோ புரொடக்ட்ஸ், மீடோ அக்ரோ பார்ம்ஸ் பிரைவேட் லிமிடெட், லெக்ஸ் பிராபர்ட்டி டெவப்மெண்ட் பிரைவேட் லிமிடெட், ராம்ராஜ் அக்ரோ மில்ஸ் பிரைவேட் லிமிடெட், இந்தோ தோகா கெமிக்கல்ஸ் பிரைவேட் லிமிடெட், சிக்னோரா எண்டர்பிரைசஸ் லிமிடெட் ஆகிய 6 நிறுவனங்களும் பினாமியாகவே செயல்பட்டது.
 
மேலும், இந்த 6 நிறுவனங்களுக்கு இடையில் பணப் பரிமாற்றம் நடைபெற்று உள்ளது. இந்த பணம் அனைத்தும் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதாவுக்கு சொந்தமானது.
 
சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த கர்நாடகா சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கருத்தில் கொள்ளாமல் கர்நாடக உயர் நீதிமன்றம் இந்த நிறுவனங்களை விடுதலை செய்துள்ளது தவறான ஆகும் என குற்றம் சாட்டினார். 
 
முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான இந்த வழக்கு  உச்சகட்டத்தை எட்டியுள்ளது என்பது குறிப்பிடதக்கது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்