கடந்த 28 ஆம் தேதி வெளிநாடு சுற்றுபயணம் மேற்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இங்கிலாந்த் பயணத்தை முடித்துக்கொண்டு தற்போது அமெரிக்காவில் உள்ளார். அங்கு பஃபல்லோ கால்நடை பண்ணையை பார்வையிட்டுள்ளார்.
இது குறித்து அவர் டிவிட்டர் பக்கத்தில், அமெரிக்கா நாட்டின் பஃபல்லோ கால்நடை பண்ணைக்கு நேரில் சென்று அங்கு செயல்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள், கால்நடைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் ஆகியவை குறித்து தெரிந்துக்கொண்டதாக பதிவிடப்பட்டுள்ளது.