விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிய முஸ்லீம்கள்.. மதநல்லிணக்கத்தின் வெளிபாடு

செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (11:38 IST)
தர்மபுரியில் விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்று கொண்டாடிய சம்பவம் மதநல்லிணக்கத்திற்கு எடுத்துகாட்டாக அமைந்துள்ளது.

இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனிடையே தர்மபுரி மாவட்டம் முழுவதும் சுமார் 900 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றது.

அந்த விழாவில் ராஜகோபால் கவுண்டர் தெருவில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைக்கு முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த முகமது டெல்லி வாலா என்பவர் ஆர்த்தி எடுத்து வழிபாடு நடத்தியது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்து முஸ்லீம் இடையே ஒற்றுமையையும் மத நல்லிணக்கத்தையும் வெளிப்படுத்த கடந்த 16 வருடங்களாக முகமது டெல்லி வாலா கலந்து கொண்டு வருகிறார் என கூறப்படுகிறது.

இதே போல் கிருஷ்ணகிரி மாவட்டம் புதுப்பேட்டையில் உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவிலும் முன்னாள் கவுன்சிலர் அஸ்லம் தலைமையில் பல முஸ்லீம் இளைஞர்கள் கலந்து கொண்டனர். இது இந்தியாவின் இந்து முஸ்லீம் இடையே மதநல்லிணக்கத்தை வெளிபடுத்துவதாக கருதப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்