சனிக்கிழமை கூடுகிறது சட்டமன்றம். பெரும்பான்மையை நிரூபிப்பாரா முதல்வர்?

வியாழன், 16 பிப்ரவரி 2017 (19:24 IST)
தமிழகத்தின் புதிய முதல்வராக இன்று பொறுப்பேற்று கொண்ட எடப்பாடி பழனிச்சாமி, 15 தினங்களில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.
 

 


ஆனால் கூவத்தூரில் ஏற்கனவே எம்.எல்.ஏக்களை கிட்டத்தட்ட பத்து நாட்கள் வைத்துவிட்டதால் இன்னும் அதிக நாட்கள் வைத்திருக்க முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே நாளை மறுநாளே சட்டமன்றத்தை கூட்டி தனிப்பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

தனக்கு 124 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதாக முதல்வர் கூறினாலும், அமைச்சர் பதவி கிடைக்காதவர்கள் அதிருப்தி இருப்பதாக கூறப்படுவதால் பெரும்பான்மை என்பது மதில் மேல் சுவராகத்தான் உள்ளது.

இந்நிலையில் நம்பிக்கை ஓட்டெடுப்பின்போது திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் யாருக்கும் ஆதரவு அளிக்கப்போவதில்லை என திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் பேட்டியளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்