டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவு

வியாழன், 9 செப்டம்பர் 2021 (21:51 IST)
நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளதை அடுத்து ஒரு சில இடங்களில் டாஸ்மாக் கடைகளை மூட டாஸ்மாக் நிர்வாகம் அதிரடியாக உத்தரவிடப்பட்டு உள்ளது
 
குறிப்பாக நாளை விநாயகர் சதுர்த்தியை ஒட்டி திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 21 டாஸ்மாக் கடைகளை நாளை ஒரு நாள் மட்டும் மூடுவதற்கு டாஸ்மாக் மாவட்ட மேலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார் 
 
மேலும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ள இடத்தில் மது விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி வேறு சில மாவட்டங்களில் டாஸ்மாக் மூட உத்தரவு அடுத்தடுத்து வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்