உணவு, தங்குமிடத்துடன் 3 ஆயிரம் உதவித்தொகை! – ஓதுவார் பயிற்சியில் சேர வாய்ப்பு!
செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (09:01 IST)
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் சார்பாக நடத்தப்படும் ஓதுவார் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த நிலையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டம் நிறைவேற்றப்பட்டதுடன், இதற்கான சான்றிதழ் படிப்புகளும் பரவலாக தொடங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் சார்பாக நடத்தப்படும் ஓதுவார் பயிற்சி பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. 3 ஆண்டுகால சான்றிதழ் படிப்பில் சேர அக்டோபர் 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த சான்றிதழ் படிப்பில் பயில்வோருக்கு 3 ஆண்டு காலத்திற்கு இலவச உணவு, உடை, தங்கும் இடத்துடன் ரூ.3 ஆயிரம் உதவித்தொகையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.