கணியூரில் வசித்து வந்தவர் துரைபாண்டி (22). இவரது நண்பர் பிரகாஷ் (22). இவ்விருவரும் ஒரு பெட்ரோல் பங்கில் வேலை செய்துவந்துள்ளனர். அப்பொழுது ஆட்டோ ஓட்டுநர் பாபு எனபவருடன் ஏற்பட்ட தகராறில் இருவரும், பாபுவை சரமாரியாகத் தாக்கினர்.
இதையடுத்து புகார் அளித்தவருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் துரைபாண்டி , பிரகாஷ் ஒருவரும் செயல்பட்டதாக வந்த புகாரின் அடிப்படையில் தற்போது இவ்விருவர் மீதும் போலீஸார் கொலைமிரட்டல் வழக்குப் பதிந்தனர். தலைமறைவான இருவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.