சமீப காலமாக டிட் டாக் செயலில் குழந்தைகள், இளசுகள் மற்றும் பெரியவர்கள் வரை பிரபலமான ஒன்றாக உள்ளது. தமிழகத்தில் இடையில் தடை செய்யப்பட்ட டிக் டாக் மீதான தடை நீக்கப்பட்டதால் மீண்டும் டிக் டாக் வீடியோக்கள் சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகின்றனர்.
டிக் டாக் வீடியோக்களை தங்களது கலைத்திறமையை வெளிப்படுத்த பயன்படுத்தினாலும், பலருக்கு இதனால் நிறைய பிரச்சனைகளும் வருகிறது. அந்த வகையில் பெண் போலீசார் இருவர் போலீஸ் யூனிஃபார்முடன் பீச்சில் நடனமாடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
கடல் மணலில் ஷூ இல்லாமல், கொலுசு அணிந்து சலக்கு சலக்கு சரிகை சேலை சலக்கு... விலக்கு விலக்கு வெட்கம் வந்தால் விலக்கு விலக்கு... என்ற பாடலுக்கு ஏற்ப நடன அசைவுகளை போடும் இரு பெண் போலீஸாரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.