அனுமதியின்றி சவுடு மண் எடுத்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் உள்ளிட்ட மூன்று பேர் கைது!

J.Durai

புதன், 24 ஜூலை 2024 (18:26 IST)
மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் அருகே நத்தம் பகுதியில் அனுமதியின்றி சவுடு மண் எடுப்பதாக மாவட்ட எஸ்.பி. மீனாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
 
இதனையடுத்து நள்ளிரவில் மாவட்ட எஸ்.பி. மீனா மற்றும் போலீசார் நத்தம் பகுதிக்கு நேரடியாக ஆய்வுக்கு சென்றனர். அப்போது அங்கு அனுமதியின்றி சவுடு மண் எடுத்துக் கொண்டிருந்த நபர்களை சுற்றி வளைத்து விசாரணை செய்ததில்  நத்தம் பகுதியைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவர்  செந்தில்குமார் என்பவருக்கு உரிய இடம் என்பதும் ,அதில் செந்தில்குமார் அரசு அனுமதி ஏதும் இன்றி சுமார் 20 அடி ஆழத்திற்கு மேல் மண்  எடுத்தது தெரியவந்தது.
 
இதனை அடுத்து எஸ்.பி. மீனா உத்தரவின் படி செந்தில்குமார் மற்றும் ஆலவெளி பகுதியை  சேர்ந்த டிராக்டர் ஓட்டுனர் கார்த்திக், கதிராமங்கலம் பகுதியைச் சேர்ந்த நாகராஜன் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.  
 
மேலும் அனுமதியின்றி மண் எடுக்க பயன்படுத்திய மூன்று டிராக்டர்கள்,  ஒரு ஹிட்டாச்சி  இயந்திரம் 2 இரு சக்கர வாகனங்கள் ஆகியவற்றை  பறிமுதல் செய்த போலீசார் அவற்றை வைத்தீஸ்வரன் கோயில் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
 
இதுகுறித்து வைத்தீஸ்வரன் கோயில் போலீசார் வழக்கு பதிவு செய்து வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்