அப்போது பணம் இல்லமால் வாட்டர் பாட்டிலை தருமாறு கூறிய இளைஞர் பிரவீன்குமார் கேட்டுகொண்டிருந்தபோது மதுபானகடை பாரின் உரிமையாளர் பிரேம்குமார் மற்றும் ஊழியர்களான சேகர், சோணைமுத்து ஆகியோர் பிரவீன்குமாரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் இளைஞரின் மூன்று பல் உடைந்து காயம் ஏற்பட்டு ரத்தம் வர தொடங்கிய நிலையில் இதனைத் தொடர்ந்து பிரவீன்குமார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்த இளைஞர் தல்லாகுளம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் கீழ் பார் உரிமையாளரும் திமுக நிர்வாகிகளுமான பிரேம்குமார்(29), சேகர்(55), சோணை(29) ஆகிய மூன்று பேரையும் தல்லாகுளம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.