எடப்பாடிக்கு சசிகலா போட்ட மூன்று கண்டிஷன்: அதிர்ச்சியில் முதல்வர்!

வெள்ளி, 17 பிப்ரவரி 2017 (12:02 IST)
தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி நேற்று பதவியேற்றார். இந்நிலையில் அவருக்கு சிறையில் இருக்கும் அதிமுக தற்காலிக பொதுச்செயலாளர் சசிகலா மூன்று உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக அதிமுக கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.


 
 
சசிகலாவின் அந்த மூன்று உத்தரவுகளையும் தற்போது துணை பொதுச்செயலாளராக உள்ள டிடிவி தினகரன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் வலியுறுத்தி சொன்னதாக கூறப்படுகிறது.
 
சசிகலாவின் கண்டிஷன் என தினகரன் கூறிய அந்த மூன்று உத்தரவுகள்:
 
1. ஆட்சி நிர்வாகத்தை கவனிப்பதற்கு உங்களை நியமித்தாலும், அதை நீங்கள் மட்டும் தனித்து செய்ய வேண்டாம் என கூறியுள்ளார்.
 
2. ஆட்சி நிர்வாகத்தில் எந்த முக்கிய முடிவு எடுக்க வேண்டுமானாலும் அதனை என்னிடமும், திவாகரனிடமும், நடராஜனிடமும் தெரிவித்து எங்கள் ஒப்புதல் பெற்ற பின்னரே செயல்படுத்த வேண்டும். எங்கள் மூவரிடமும் ஆட்சி நிர்வாகத்தில் உள்ள அனைத்து விவரங்களையும் கூறி எங்களின் வழிக்காட்டுதலோடு ஆட்சியை நடத்த வேண்டும்.
 
3. வாரத்திற்கு ஒரு நாள் சிறையில் இருக்கும் சசிகலாவை கட்டாயம் சந்திக்க வேண்டும். அவரிடமும் ஆட்சி நிர்வாகத்தில் இருக்கும் அனைத்து விவரங்களையும் கூறி அவரது ஒப்புதலையும் பெற வேண்டும்.
 
இவ்வாறு மூன்று கட்டளைகளை சசிகலா தினகரன் மூலம் எடப்பாடி பழனிச்சாமிக்கு பிறப்பித்ததாக அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள எடப்பாடி பழனிச்சாமி முதல்வரான சந்தோஷத்தை விட இந்த உத்தரவுகளை நினைத்து கலக்கத்தில் உள்ளாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்