”பாஜக தலைவர் ரஜினி”: காமெடி பண்ணிகிட்டு போங்கயா... திருநாவுக்கரசர் பொளேர்!

புதன், 4 செப்டம்பர் 2019 (16:10 IST)
நடிகர் ரஜினிகாந்த் பாஜக மாநில தலைவர் பதவியா, தேசிய தலைவர் பதவியை கொடுத்தாலும் ஏற்க மாட்டார் என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். 
 
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதை அடுத்து தமிழக பாஜகவுக்கு புதிய தலைவரை தேர்வு செய்யும் பணியில் பாஜக மேலிடம் உள்ளது. 
 
இந்த பதவிக்கு எஸ்வி சேகர், இல கணேசன், பொன் ராதாகிருஷ்ணன், வானதி ஸ்ரீனிவாசன், கேடி ராகவன் உள்பட சுமார் 8 பேர் பட்டியலில் இருப்பதாகவும் இவர்களில் ஒருவர் பாஜக தலைவராக தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் பாஜகவின் நெருங்கிய வட்டாரங்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் பாஜகவிற்கு சம்பந்தமே இல்லாத ரஜினியை பாஜக தமிழகத் தலைவராக நியமனம் செய்ய இருப்பதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இது குறித்து எம்பியும் ரஜினியின்  நண்பருமான திருநாவுக்கரசரிடம் கேட்கப்பட்டத்தற்கு. அதற்கு அவர் பதில் அளித்தது பின்வருமாறு... 
ரஜினிகாந்த் பாஜகவில் உறுப்பினரே இல்லை. பாஜகவில் உறுப்பினராக இல்லாத ஒருவரால் எப்படி அக்கட்சியின் மாநில தலைவராகிவிட முடியும். பாஜகவில் மாநில தலைவர் பதவி என்றில்லை, தேசிய தலைவர் பதவியை கொடுத்தாலும் கூட ரஜினி ஏற்க மாட்டார். இதெல்லாம் வேடிக்கையானவை, இதை நான் சீரியஸாக எடுக்கவும் இல்லை என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்