அதுமட்டுமல்லாமல் சென்னையா? ஆந்திர பிரதேசமா? என்ற ஒரு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு செல்லாது என கூறியிருப்பதை சுட்டிக்காட்டிய அவர் அந்த தீர்ப்பில் பட்டியல் இன மக்கள் அத்தனை பேரும் ஒரே வகையை சேர்ந்தவர்கள் அவர்கள் ஹோமோஜினியஸ் என்று இருப்பதாக குறிப்பிட்டார்கள் ஆனால் தற்பொழுது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பில் கடந்த காலம் வழங்கப்பட்ட தீர்ப்பு செல்லாது என்று கூறுவதுடன் பட்டியலின மக்கள் அனைவரும் ஹோமோஜினியஸ் அல்ல ஹெட்ரோஜீனியஸ், அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பண்பாடு ஒவ்வொரு விதமான வாழ்க்கை முறை இருக்கிறது எனவே அவர்கள் ஒரே வகையில் சேர்ந்தவர்கள் அல்ல என்று இந்த உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கியிருக்கிறது என்றார்.