’அரசியலில் பரபரப்பு’ - பாஜகவுடன் நெருங்கும் திருமாவளவன்…?

சனி, 15 அக்டோபர் 2016 (11:28 IST)
தேசிய தலித் முன்னணி மாநாடு, நவம்பர் 12 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாகவும், அதில் மத்திய அமைச்சர்கள் ராம்விலாஸ் பஸ்வான், ராம்தாஸ் அத்வாலே ஆகியோர் பங்கேற்கின்றனர் என்றும் விடுதலை சிறுத்தைகளை தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.


 
 
இதை அடுத்து, மத்திய பாஜக அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களை வைத்து நிகழ்ச்சி நடத்துவதா என்று, கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் அவர்கள் மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்தாலும், தனியாக கட்சி நடத்தக் கூடியவர்கள், அவர்கள் தலித் தலைவர்கள் என்பதால் அழைக்கப்பட்டுள்ளனர் என்று கட்சி சார்பில் சிலர் விளக்கம் அளிக்கப்பட்டது.
 
இதற்கிடையே, அண்மையில் குஜராத்தில் தலித் மக்களின் கதாநாயகானாக உருவெடுத்துள்ள ஜிக்னேசை நிகழ்ச்சிக்கு அழைக்க வேண்டியதுதானே, என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்