முதல்வருடன் திரையரங்க உரிமையாளர்கள் திடீர் சந்திப்பு...

செவ்வாய், 20 மார்ச் 2018 (21:58 IST)
திரையரங்க உரிமையாளர்கள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கேளிக்கை வரியை ரத்து செய்ய கோரி கோரிக்கை வைத்துள்ளனர். 
 
டிஜிட்டல் ஒளிபரப்பு, உள்ளாட்சி சேவை வரி விதிப்புக்கு எதிராக தமிழ் திரை உலகினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், தமிழக அரசு சார்பில் நல்ல பதில் வராத காரணத்தால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் திரையரங்குகள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் மூடப்பட்டன. இந்நிலையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் தியேட்டர் உரிமையாளர்கள் சந்தித்து பேசினர். 
 
அதில், 8% கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும், ஆண்டுக்கு ஒரு முறை திரையரங்க உரிமத்தை புதுப்பிக்கும் முறையை 3 ஆண்டுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்