கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற உபி மாநிலத்தின் கோரக்பூர் மற்றும் புல்பூர் தொகுதியில் பாஜக தோல்வி அடைந்தது. இந்த இரண்டு தொகுதிகளையும் அகிலேஷ்-மாயாவதி கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதில் முதல்வர் யோகி ஆதித்யநாத் 5 முறை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் முதல்வர் ஆனவுடன் ராஜினாமா செய்த தொகுதி கோரக்பூர் என்பது குறிப்பிடத்தக்கது
கோரக்பூர் தொகுதியிலும் சமாஜ்வாதி வேட்பாளர் பிரவீன்குமார் 21000 வாக்குகள் வித்தியாசத்திலும், புல்பூர் தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளர் நாகேந்திர பிரதாப் சிங் சுமார் 59,000 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றனர். இந்த இரு தொகுதிகளின் தோல்வி, பாஜகவின் வீழ்ச்சிக்கான ஆரம்பம் என்று எதிர்க்கட்சியினர்களால் விமர்சனம் செய்யப்படுகிறது