சமீபத்தில் மலையாளத்தில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் தமிழகத்திலும் மிகப்பெரும் ஹிட் அடித்துள்ளது. 2006ல் கேரளாவிலிருந்து குணா குகையை சுற்றி பார்க்க வந்த நண்பர்கள் குழுவில் ஒருவர் குகை பள்ளத்தில் சிக்கிக் கொள்ள, அவரை நண்பர்கள் எப்படி காப்பாற்றினார்கள் என்பதே கதை.
குணா குகையை சுற்றி பார்க்க சென்ற கிருஷ்ணகிரியை சேர்ந்த நண்பர்கள் குழு ஒன்று தடுப்பு வேலியை தாண்டி குதித்து குகைக்குள் சென்று பார்க்க முயற்சித்துள்ளனர். தடுப்பு வேலியை தாண்டி குதித்த விஜய், பரத் மற்றும் ரஞ்சித் என்ற மூன்று சுற்றுலா பயணிகளையும் வனச்சட்டத்தின்படி வனத்துறை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் இதுபோன்ற ஆபத்தான முயற்சிகளை மேற்கொண்டால் சட்டநடவடிக்கையை சந்திக்க நேரிடும் என பயணிகளுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.