மலையாளத்தில் வெளியான மஞ்சும்மெல் பாய்ஸ் என்ற படம் தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வசூலை வாரி குவித்து வரும் நிலையில் தமிழர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். பல திரை உலக பிரபலங்கள் இந்த படத்திற்கு தங்கள் ஆதரவையும் படக்குழுவினர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துவரும் நிலையில் எழுத்தாளர் மற்றும் திரைப்பட வசனகர்த்தா ஜெயமோகன் இந்த படத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்
குடி குடி குடி என விழுந்து கிடப்பது, வேறு எதிலும் அவர்களுக்கு ஆர்வம் இல்லை, எந்த பொது நாகரீகமும் அவர்களுக்கு கிடையாது என்று தெரிவித்துள்ளார். இந்த மலையாள பொறுக்கிகளுக்கு இன்னொரு மொழி தெரியாது, ஆனால் அவர்கள் மொழி பிறருக்கு தெரிந்திருக்க வேண்டும் என்ற தெனாவட்டு இருக்கும் என்றும் ஜெயமோகன் தெரிவித்துள்ளார்