தமிழகத்தில் வரும் 9 ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போக்குவரத்து தொழிற்சங்கங்கள் முடிவெடுத்தன. இதையடுத்து அரசுடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்ட அறிவிப்பை திரும்ப பெறப்போவதில்லை அறிவித்துள்ளன.
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில், போக்குவரத்து சங்கங்களுடன் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், வரும் ஜனவரி 9 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன.
எனவே போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தம் தொடர்பாக சென்னையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் பொதுமக்களை கருத்தில் கொண்டு போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்துமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டதாக தகவல் வெளியானது.
மேலும், அமைச்சர் சிவங்கர் கால அவகாசம் கேட்டுள்ள நிலையில், நல்ல முடிவை அறிவிப்பார் என அன்புகிறோம் எனவும், கோரிக்ர்கைகள் நிறைவேறும் வரை போராட்ட அறிவிப்பை திரும்ப பெறப்போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.