அசுரத்தனமா ...கூட்டம் கூட்டமாய் ஓடும் யானைகள் ... வைரல் வீடியோ

சனி, 2 நவம்பர் 2019 (17:20 IST)
இயற்கை எழிலுக்கு பெயர் பெற்ற இடம் கோவை மாவட்டத்தில் உள்ள வால்ப்பாறை. இது மலைகளின் இளவரசி என அழைக்கப்படுகிறது. இங்குள்ள  இடத்திற்கு செல்ல வேண்டுமென்பது அனைவரது எதிர்ப்பார்ப்பாக இருக்கும்.
இந்நிலையில் யானைகள் கூட்டம் கூட்டமாய் ஓடிச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 
வால்பாறை வட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற இடம் சிறுகுன்றா, இங்குள்ள பிரிட்டிஷ் பங்களாவுக்கு அருகில் சமீபத்தில் யானைகள் ஒரு கூட்டமாய் படையெடுத்தது வந்தன. அதில் குட்டி யானைகள் முதற்கொண்டு பெரிய யானைகள் திடுமென வந்து தேயிலைக் காட்டுக்குள் ஓடிச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரவலாகி வருகிறது. 

யானைகள் பெரும்பாலும் தண்ணீருக்காகவும், உணவுக்காகவும்தான் இந்த மாதிரி ஓடுவதாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்