குடையுடன் வந்தால்தான் மதுபானம்... திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

செவ்வாய், 5 மே 2020 (19:28 IST)

மூன்றாம் கட்ட ஊரடங்கு மே 17 வரை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன.  தமிழகத்திலும் மே 7 முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள சூழலில் டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என பலர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக அரசின் இந்த முடிவு குறித்து விளக்கமளித்துள்ள அமைச்சர் செல்லூர் ராஜூ “கள்ள சாரயத்தை ஒழிக்கவும், மக்கள் வெளிமாநிலங்களுக்கு சென்று மது வாங்குவதை தடுக்கவும் மதுக்கடைகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்கும் முடிவு அரசு மனமுவந்து எடுத்த முடிவல்ல” என்று அவர் கூறியிருந்தார்.

இதுகுறித்து, தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளதாவது :

கர்நாடகாவிலும், பாண்டிச்சேரியிலும் மதுபானக் கடைதிறக்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் இரண்டு கி.மீ, தூரம் நடந்து சென்றே மதுவை வாங்கி வருவதல், சில போலியான மதுபானங்கள் வர வாய்ப்புள்ளதால் , அதைத் த்ஃஅடுக்க வேண்டும் என்பதற்காக,வே  முதல்வர் டாஸ்மாக் கடையை திறக்க முன்வந்துள்ளார். அதனால் மக்களின் நலனுக்கமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

மூன்றாம் கட்ட ஊரடங்கு மே 17 வரை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் மே 7 முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள சூழலில் டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என பலர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக அரசின் இந்த முடிவு குறித்து விளக்கமளித்துள்ள அமைச்சர் செல்லூர் ராஜூ “கள்ள சாரயத்தை ஒழிக்கவும், மக்கள் வெளிமாநிலங்களுக்கு சென்று மது வாங்குவதை தடுக்கவும் மதுக்கடைகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்கும் முடிவு அரசு மனமுவந்து எடுத்த முடிவல்ல” என்று அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், குடையுடன் வந்தால் மட்டுமே மதுபானம் வழங்கப்படும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

திருப்பூர் மாவட்டத்தில் சமூக இடைவெளியை தீவிரமாகக் கடைபிடிக்கும் பொருட்டு மதுபான கடைகளுக்கு வருபவர்கல் தவறாமல் குடை கொண்டு வந்து மதுபானங்களைப் பெற்றுச் செல்லவேண்டும் ; குடையுடன் வராதவர்களுக்கு  மதுபானம் வழங்கப்படாதது  என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்