செஞ்சி அருகே உள்ள திருவம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன். இவருக்கு செல்வி என்ற பெண்ணோடு 7 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. ஆனால் இப்போது அன்பழகன், செல்வியிடம் தாய் வீட்டில் இருந்து வரதட்சணை வாங்கி வர சொல்லி தொல்லைக் கொடுத்துள்ளார்.
இதனால் மனமுடைந்த செல்வி தன் மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரை குற்றுயிரும் குலையுருமாக கீழப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்துள்ளனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதையடுத்து செல்வியின் தாயார் அளித்த புகாரின் படி அன்பழகன் மற்றும் அவரது உறவினர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.