ஹெல்மெட் விவகாரம் - தமிழக அரசுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்

புதன், 22 ஜூன் 2016 (16:16 IST)
தமிழகத்தில் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை முறையாக அமுல்படுத்தாதது ஏன் என்று அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

 
தமிழகத்தில், இரண்டு சக்ர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கடந்த 2007 ஆம் ஆண்டு சட்டம் கொண்டு வரப்பட்டது.
 
ஆனால், இந்த சட்டத்தை பலர் பின்பற்றுவதில்லை என்றும், ஹெல்மட் அணிவது கட்டாயம் என்றும், ஹெல்மட் அணியாதவர்களளின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
இந்த நிலையில், தலைமை நீதிபதி கவுல் கூறுகையில், சாலையில் செல்லும் பலர் ஹெல்மெட் அணிந்து செல்கின்றனர். ஆனால், சிலரும், மாணவர்கள் ஹெல்மெட் தலைக்கவசம் அணிந்து செல்வதில்லை. இந்த சட்டத்தை முறையாக பின்பற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
 
ஹெல்மெட் சட்டத்தை முழுமையாக தமிழக அரசு செயல்படுத்தவில்லை. எனவே, இந்த சட்டத்தை அமல்படுத்தாதது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். 

வெப்துனியாவைப் படிக்கவும்