சாலையோர கடையில் சாப்பிட்ட திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன்...

வெள்ளி, 6 செப்டம்பர் 2019 (15:14 IST)
கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 354 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று, பிரதமர்  மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பதவியேற்றது.  தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகள் 37 தொகுதிகளில் வெற்றிபெற்றன. இதையடுத்து வேலூரில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் திமுக வெற்றி பெற்று நாட்டில் மூன்றாவது மிகப்பெரிய கட்சியாக விளங்குகிறது.
இந்நிலையில், திமுகவின் சார்பில்  தென்சென்னை மக்களவைத்  தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தமிழச்சி தங்கபாண்டியன், பெருங்குடியில் உள்ள  ஒரு தள்ளுவண்டிக்கடையில் அமர்ந்து சாப்பிட்ட சம்பவம் இன்று தமிழகத்தில் அரசியல் விமர்சகர்களால்  கூர்ந்து கவனிக்கப்படுகிறது.
 
இந்த சாலையோரக் கடையில் தமிழச்சி தங்கபாண்டியனுடன்  முட்டை தோசை மற்றும் பொடிதோசையை ஆர்டர் செய்து வாங்கி சாப்பிட்டார். பின்னர் அங்கிருந்த வாடிக்கையாளர்கள் அவரைச் சுற்றி நின்று போட்டோ எடுத்துக் கொண்டனர்.
 
இதுகுறித்து தமிழச்சி தங்கபாண்டியன் கூறிதாவது : ’மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, இந்தக் கடையில் சாப்பிட வேண்டுமென்று ஆசையாக இருந்தது. இப்போது நிறைவேறிவிட்டது’ என தெரிவித்துள்ளார். இவர் சாலையோரத்தில் சாப்பிடும் போட்டோ இணையத்தில் பரவிவருகிறது. 
 
மக்களில் ஒருவராக  இருக்கவேண்டும் என்பதற்காக அதிமுக பிரமுகர்கள்,  அமைச்சர்கள் கடையில் மக்களோடு மக்களாக அமர்ந்து டீ குடிப்பதாக சமீபத்தில் செய்திகளில் வெளியானது. இந்நிலையில்  திமுக கட்சியினரும், அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு குறிவைத்துத்தான் மக்களை கவர இதுபோன்ற கவன ஈர்ப்புகளை  ஏற்படுத்திவருவதாக தகவல்கள் வெளியானது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்