’பேஸ்புக்கில் பதிவிட்டவரை நாடு கடத்திய அரசு’

வெள்ளி, 22 மார்ச் 2019 (13:44 IST)
சமீபத்தில் தீவிரவாதத்தின்  கோர வடிவம் பல்வேறு நாடுகளையும் பாதித்து வருகிறது. சென்ற மாதம் இந்தியாவில் காஸ்மீர் பகுதியில் உள்ள புல்வாமா தாக்குதலை நடத்தியது பாகிஸ்தானில் உள்ள திவிரவாத கும்பல். இதேபோல் கடந்த வெள்ளிகிழமை அன்று நியூஸிலாந்து நாட்டில் கிரைஸ்ட்சர் நகரில் உள்ள இஸ்லாம் மசூதி கூடத்துக்குள் புகுந்த இளைஞர் அங்கிருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் 5 இந்தியர் உள்பட 50 பேர் பலியாகினர்.
அதன் பின்னர் இந்த தாக்குதலை நடத்திய பிரண்டன் டாரண்ட் என்பவரை (28) காவல் துறை கைது செய்தது. இவர் ஆஸ்திரேலியர் ஆவார்.
 
இந்த தாக்குதலுக்கு உலக்கிலுள்ள பல்வேறு நாடுகள் கண்டனக்குரலை எழுப்பின. இந்ந்நிலையில் ஐக்கிய அமீரகத்தின் டிரான்கார்ட் என்ற நிறுவனத்தில் பணியாற்றி வந்த நபர் இந்த தாக்குதலுக்கு ஆதரவாக தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவிட்டார்.
இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த அமீரக அரசு பேஸ்புக்கில் பதிவிட்டவரை பணியை விட்டு நீக்கியது. தற்போது அவரை நாட்டை வெளியேற்றியுள்ளது.
 
உலக நாடுகளோடு இணைந்து ஐக்கிய அமீரக அரசும் தீவிரவாதத்தை ஒழிக்க முயற்சி மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்