குடியுரிமை சட்ட திருத்த மசோதாவால் எந்த பாதிப்பும் இல்லை - முதல்வர் பழனிசாமி

வியாழன், 19 டிசம்பர் 2019 (18:29 IST)
இந்தியாவில் பாஜக தலைமையிலான மத்திய அரசு ஆட்சி செய்து வருகிறது. சமீபத்தில் இந்திய குடியுரிமைச் சட்ட திருத்தம்  பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அஸ்ஸாம், டெல்லி , மும்பை, உத்தரபிரதேசம் ,தமிழகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில்  மாணவர்கள், எதிர்கட்சிகள்  உள்ளிட்ட எல்லோரும் போராடி வருகின்றனர். 
இந்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்ட திருத்தத்தின் படி, அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம் ,இலங்கையில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகும் முஸ்லிம் அல்லாத மக்களுக்கு குடியுரிமை வழங்குவதே ஆகும்.
 
இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  இந்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை சட்டத்தால் இந்தியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்