விருதுநகரில் ₹500 கோடி மதிப்பில் மத்திய அரசு ஜவுளிப் பூங்கா அமைக்கவுள்ளது- அண்ணாமலை

ஞாயிறு, 6 ஆகஸ்ட் 2023 (17:54 IST)
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின்  ‘’என் மண் என் மக்கள்’’ என்ற பாதயாத்திரை   நடந்து வரும்  நிலையில், இன்று அண்ணாமலை உள்பட பாஜகவினர் திருப்பரங்குன்றம் சென்றுள்ளனர்.

இதுகுறித்து, அண்ணாமலை தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘’இன்றைய #EnMannEnMakkal பயணம், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில் சிறப்பாக அமைந்ததில் பெரும் மகிழ்ச்சி.

இந்தப் பகுதி நெசவுத் தொழில் சிறந்து விளங்குகிறது. எனவே அருகில் விருதுநகரில் ₹500 கோடி மதிப்பில் மத்திய அரசு ஜவுளிப் பூங்கா அமைக்கவுள்ளது. மேலும், பட்டு நெசவுத் தொழிலாளர்கள் முன்னேற்றத்துக்காக சில்க் சமக்ரா திட்டத்தின் கீழ் ₹115 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் நெசவுத் தொழிலில் பெரும்பாலும் ஈடுபட்டுள்ள சௌராஷ்டிரா மக்களின் பங்களிப்பை உலகறியச் செய்துள்ளார் நமது பிரதமர் மோடி அவர்கள்.

தேர்தல் நேரத்தில் மட்டும் தறியின் முன் அமர்ந்து நடிக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நெசவாளர்களின் வலி எப்படித் தெரியும்? நூல் கொள்முதல் நிலையம், நெசவாளர்களுக்கென தனி வங்கி என்றெல்லாம் வாக்குறுதிகள் கொடுத்து ஏமாற்றி விட்டு, மின்சாரக் கட்டணத்தை 15% உயர்த்தியும், அரசு செய்யும் இலவச வேட்டி சேலை கொள்முதலில் 10% கமிஷன் அடிப்பதையும்தான் ஊழல் திமுக அரசு செய்து வருகிறது.

மோடியின் முகவரி : திருப்பரங்குன்றம்

தமிழகத்தில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு மத்திய அரசு வழங்கிய நிதி 395 கோடி மூலம் பயன்பெற்ற திருப்பரங்குன்றம் திருமதி இருளாயி, தமிழகத்தில் 1.4 கோடி பிரதமரின் இலவச வங்கிக்கணக்குகளில் ஒன்று திருமதி பஞ்சு அவர்களுடையது. பிரதமமந்திரி வீடு கட்டும் திட்டத்தின் மூலம் பலன் பெற்ற 15 லட்சம் பேரில் திருமதி லட்சுமி, ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தில், 1694.37 கோடி ரூபாய் நிதியில் பலன் பெற்ற திருமதி முத்தம்மாள், உஜ்வாலா திட்டம் ஒன்று மற்றும் இரண்டின் கீழ் 37 லட்ச பயனாளிகளில் ஒருவரான திருமதி ஆதிமீனா - இவர்கள்தான் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு  நரேந்திரமோடி அவர்களின் முகவரி.

விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்வதில் வித்தகர்களான திமுக காங்கிரஸ் கூட்டணியை இனியும் மக்கள் நம்பி ஏமாறத் தயாராக இல்லை. வரும் பாராளுமன்றத் தேர்தலில், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு  நரேந்திரமோடி அவர்கள் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக மீண்டும் பாரதப் பிரதமராகப் பதவியேற்பது உறுதி. அதில் தமிழகத்தின் பெரும்பங்கும் நிச்சயமாக இருக்கும் என்பது இங்கு கூடியிருக்கும் மக்களின் பேராதரவில் தெரிகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்