பட்டி போட்டு ஆடு மேய்க்கும் கோவிந்தராஜன் ரூபாய் 62 ஆயிரம் கொடுத்து 4 சிறுவர்களையும் ஆடு மேய்ப்பதற்காக 2 ஆண்டுகளுக்கு கொத்தடிமையாக வாங்கியுள்ளார். இந்நிலையில் மன்னார்குடி அருகே சூரக்கோட்டை பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவர்களை விசாரித்த சமூக ஆர்வலர் ஒருவர் சைல்டு லைன் எண்ணிற்கு அழைத்து புகார் அளித்துள்ளார்.
அதை தொடர்ந்து சைல்டு லைன் அதிகாரிகளும், போலீஸாரும் விரைந்து வந்து சிறுவர்களை மீட்டு சிறுவர்கள் இல்லத்தில் சேர்த்துள்ளனர். மேலும் குழந்தைகளை கொத்தடிமையாக விற்ற பெற்றோரிடமும், வாங்கிய கோவிந்தராஜனிடமும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.