முதல்வர் பதவி - குற்றாலம் டூ கோட்டை: தங்க தமிழ்செல்வன் பேட்டி!

புதன், 24 அக்டோபர் 2018 (16:00 IST)
தமிழகத்தில் 18 சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதற்காக சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். 
 
இதனையடுத்து தகுதி நீக்கத்தை எதிர்த்து 18 எம்.எல்.ஏக்களின் சார்பாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு விசாரணையும் முடிந்து ஏற்கனவே இரண்டு நீதிபதிகள் தீர்ப்பு கூறிவிட்ட நிலையில் மூன்றாவது நீதிபதி சத்திய நாராயணன் தீர்ப்பு மட்டுமே பாக்கியுள்ளது.
 
இந்நிலையில், டி.டி.வி.தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்களும் தினகரன் உத்தரவின் பேரில் குற்றாலத்தில் உள்ள இசக்கி ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே தங்க தமிழ்செல்வன் பேட்டி அளித்தது பின்வருமாறு, இன்னும் ஓரிரு நாட்களில் நல்ல தீர்ப்பு வர இருக்கிறது. நல்ல தீர்ப்பு வந்தால் ஆட்சியை கலைக்க மாட்டோம், எங்களில் 18 பேரில் ஒருவர் முதல்வர் ஆவார். 
 
குற்றாலத்தில் தங்கியிருக்கிறோம், தகுதிநீக்க வழக்கில் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் நேரடியாக கோட்டைக்குத்தான் செல்வோம். தற்போது எங்களுடன் 20 பேர் உள்ளனர். மேலும் இருவர் வருவார்கள் என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்