இதற்கு விளக்கமளித்த தம்பிதுரை, பாஜகவின் கொள்கைகள் சில சரியாக இல்லாததால் தான் பாஜகவை விமர்சிக்கிறேன். அதிமுகவின் எம்எல்ஏக்களை பாஜக கிள்ளுக்கீரை போல் நினைக்கிறது. எங்கள் கட்சி நபர்களை பாஜகவினர் ஒழுங்காக நடத்துவதில்லை. அதனால் தான் அவர்களை விமர்சிக்கிறேன் என கூறினார்.
மத்திய பாஜக அரசு தற்பொழுது தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்தும் அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். பாஜக தமிழகத்திற்கு இதுவரை ஒன்னும் செய்யவில்லை எனவும், பாஜக தமிழகத்தை அழிவை நோக்கி கொண்டு செல்லப்பார்க்கிறது எனவும் கூறினார்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, தவறான இடத்தில் இருக்கும் சரியான நபர் தம்பிதுரை. பாஜகவை பற்றி தம்பிதுரைக்கு தற்போது தெரிந்துவிட்டது. அதேபோல் அங்குள்ள மற்றவர்களுக்கு இது தெரியவரும் என கூறினார். ஏற்கனவே தம்பிதுரை திமுகவில் இணைய இருக்கிறார் என வதந்தி கிளம்பிவரும் நிலையில் கனிமொழி இப்படி கூறியிருப்பது அதிமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.