இந்த போட்டியில் 681 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் களம் கண்டு வருகின்றனர். சீறிவரும் காளைகளை தீரத்துடன் மாடுபிடி வீரர்கள் அடக்கி வருகின்றனர். திமிழுடன் திமிரி வரும் காளைகள் மாடுபிடி வீரர்களை பந்தாடி வருகிறது.
தமிழகத்தில் எங்கும் இல்லாத வகையில் முதன்முறையாக ஜல்லிக்கட்டில் வெற்றி பெறும் சிறந்த காளைக்கு டாடா ஏசி வாகனமும், சிறந்த மாடுபிடி வீரருக்கு ஆட்டோ, இரண்டு மற்றும் மூன்றாம் பரிசு பெறும் மாடுபிடி வீரர்களுக்கு இருசக்கர வாகனமும் பரிசாக வழங்கப்பட்ட உள்ளது.,
உசிலம்பட்டி கோட்டாச்சியர் ரவிச்சந்திரன், டிஎஸ்பி நல்லு தலைமையில் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து காளைகள் பங்கேற்றுள்ள சூழலில் அனைத்து காளைகளுக்கும் சிறப்பு பரிசாக சேர், வெற்றி பெறும் காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு தங்கம், வெள்ளி காசுகள், பீரோ, சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.