பயனில்லாமல் இருக்கும் 2000 கிலோ தங்கம்: அமைச்சர் சேகர்பாபுவின் அதிரடி திட்டம்

செவ்வாய், 27 ஜூலை 2021 (07:50 IST)
கோவில்களில் பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த சுமார் 2,000 கிலோ தங்கம் பயன் இல்லாமல் இருப்பதாகவும் அதனை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்
 
தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் பணம் மட்டுமின்றி தங்கம் வெள்ளி போன்ற பொருள்களையும் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் காணிக்கையாக வந்த தங்கம் மட்டும் சுமார் 2,000 கிலோ இருப்பதாகவும் அந்த தங்கம் பயன் இல்லாமல் இருப்பதை அடுத்து அதனை பயன்படுத்த முடிவு செய்திருப்பதாகவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார் 
 
தமிழக கோவில்களில் இருந்து காணிக்கையாக கிடைத்த 2000 கிலோ தங்கத்தை வங்கியில் டெபாசிட் செய்து அதன் மூலம் வரும் வட்டித் தொகையை கோயில்கள் சீரமைப்பு பணிகளுக்கு பயன்படுத்த திட்டமிட்டு உள்ளோம் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த நடவடிக்கைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்