ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கள்ளுக்கடை திறப்பது குறித்து ஆய்வு செய்து பல துறைகளில் பேசி முடிவெடுக்க வேண்டும் என்றார். டாஸ்மாக் கடைகளை குறைப்பது என்பது உடனடியாக செய்ய முடியாது என தெரிவித்த அமைச்சர் முத்துசாமி, குடிப்பழக்கம் உள்ளவர்களை படிப்படியாக குறைக்க வேண்டும் என்பது அரசின் நோக்கம் என்று கூறினார்.
மேலும் செப்டம்பர் மாதம் முதல் டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் நடைமுறைக்கு வருகிறது என்று அவர் கூறினார். ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்றும் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.