டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்க முயன்றவர் மீது துப்பாக்கி சூடு: நீலகிரியில் பரபரப்பு..!

வெள்ளி, 26 மே 2023 (07:24 IST)
நீலகிரியில் டாஸ்மாக் கடையில் கொள்ளை அடிக்க வந்த கொள்ளையர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நீலகிரி மாவட்டத்தில் உள்ள குந்தலாடி என்ற பகுதியில் டாஸ்மாக் கடையில் கொள்ளை அடிக்க கொள்ளையர்கள் இருவர்  முயற்சி செய்துள்ளதாக தெரிகிறது. இது குறித்து தகவல் அடைந்த காவல் துறையினர் உடனடியாக சென்று கொள்ளையனை பிடிக்க முயன்ற போது கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது 
 
மேலும் கொள்ளையர்களில் ஒருவன் போலீசார் மீது கத்தியால் தாக்கியதாகவும் தெரிகிறது. இதனை அடுத்து போலீசார் கொள்ளையன் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் காயமடைந்த கொள்ளையன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் 
 
முதல் கட்ட விசாரணையில் கொள்ளையன் பெயர் மணி என்று அறியப்பட்டது. இந்த நிலையில் காயம் அடைந்த கொள்ளையன் மணி சிகிச்சைக்காக கூடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் தப்பியோடிய மற்றொரு கொள்ளையனை பிடிக்க போலீசார் தீவிரமாக வலை வீசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்