வாக்கு எண்ணிக்கை - உத்தரவின் பெயரில் டாஸ்மாக் கடைகள் மூடல்!

செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (11:04 IST)
வாக்கு எண்ணிக்கை மையங்களில்  5 கி.மீ சுற்றளவில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதன் பெயரில் முடல்.
 
 
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இன்று உள்ளாட்சி தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் பல பகுதிகளில் திமுக முன்னிலையில் உள்ளது.
 
இந்நிலையில் தமிழகம் முழுவதும் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளிலும், அப்பகுதிக்கு சுற்று வட்டாரத்தில் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளிலும் பீர், ஒயின் மற்றும் இந்திய தயாரிப்பு மதுபானங்களை விற்பனை செய்வதற்கும், மது பார்களைத் திறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த 19 ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று  முடிந்துள்ளது. அப்போதும் டாஸ்மாக் மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்