இந்த உத்தரவின்படி ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் மதுக்கடைகளை மூடவேண்டும் என்றும் ஆன்லைனில் மட்டுமே மதுக்களை விற்பனை செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் மீறப்பட்டதால் இந்த அதிரடி உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இது சம்மந்தமான வழக்கு இப்போது மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டு நாளை விசாரணைக்கு வர உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தலைமை நீதிபதி ஏ.பி சாஹி, நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் பி.என் பிரகாஷ் ஆகியோர் கொண்ட மூன்று பேர் அமர்வு டாஸ்மாக் தொடர்பான வழக்குகளை நாளை காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.