டாஸ்மாக் கடைகளில் உள்ள அனைத்து மதுபான வகைகளும் அதிகபட்ச விலையை விட கூடுதலான விலைக்கே விற்கப்பட்டு வருகிறது. இந்த மோசடி தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான கடைகளில் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து சேலம் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த குல்லு என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை ஏற்று விசாரித்த நீதிபதிகள் ‘அதிக விலைக்கு விற்பவர்கள் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என டாஸ்மாக் நிர்வாகத்துக்கு கேள்வி எழுப்பினர். அதற்கு நேற்று பதிலளித்த டாஸ்மாக் நிர்வாகம் ‘கடந்த ஒரு ஆண்டில் இதுபோல் அதிகவிலைக்கு மதுவிற்றவர்கள் மேல் 9319 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே போல அதிகவிலை வைத்து விற்பவர்களுக்கு 1000 முதல் 10000 ரூ அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுகின்றனர்’ எனக் கூறியுள்ளது.