பஞ்சாப்பாக உருவெடுக்கும் தமிழகம்

செவ்வாய், 12 ஜூலை 2016 (12:04 IST)
விழுப்புரம் மாவட்டத்தில் கடைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 114 கிலோ போதை சாக்லெட்டுகளை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


 

 
சென்னை தண்டையார்பேட்டையில் போதை சாக்லெட்டுகள் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, தமிழகம் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகின்றது.
 
இதில் விழுப்புரம் மாவட்டத்தில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் வரலட்சுமி தலைமையில் மொத்த மிட்டாய் விற்பனை கடையில் தீவிர சோதனை நடைப்பெற்றது. 
 
அதில் 100 கிலோ அளவில் விற்பனைக்காக பதுக்கப்பட்டிருந்த போதை சாக்லெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதைத்தொடர்ந்து பல்வேறு இடங்களில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கடைகளில் அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் அதிக அளவில் போதை கலந்த மிட்டாய்கள், தின்பண்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டன். 
 
மேலும் இதுகுறித்து வரலட்சுமி, விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் 114 கிலோ போதை சாக்லெட்டுகள், 200 கிலோ அளவிலான தின்பண்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்து சென்னை கிண்டியில் உள்ள ஆய்வகத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பப்படும், என்றார்.
 
சோதனையில் சிக்கிய போதை சாக்லெட்டுகள் சுமார் 500 கிலோ அளவை தாண்டியிருக்கும் நிலையில், இது தொடர்ந்தால் தமிழகம் பஞ்சாப் போன்று மாற வாய்ப்புள்ளது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்