வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் கடந்த மாதம் முதலாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்குள்ளாக சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், கரூர், மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.