கரை கடக்கும் காற்றழுத்த பகுதி.. டெல்டாவில் கனமழை! – வானிலை ஆய்வு மையம்!

திங்கள், 7 மார்ச் 2022 (12:31 IST)
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி கரை கடந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.

வடகிழக்கு பருவமழை முடிந்துவிட்ட நிலையில் திடீரென வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து இன்று தமிழகத்தில் கரை கடந்தது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளது.

முக்கியமாக டெல்டா பகுதிகளான நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று மாலை முதலாகவே கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தமிழகத்தில் சில பகுதிகளில் மிதமான அளவில் மழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்