யூஸ் ஆகாத சட்டங்களை நீக்க முடிவு! – மசோதா தாக்கல் செய்த அமைச்சர் சி.வி.சண்முகம்!

வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (13:01 IST)
தமிழகத்தில் பயன்பாட்டில் இல்லாத பழைய சட்டங்களை நீக்குவதற்கான மசோதாவை இன்று சட்டமன்றத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 2021-22ம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் பட்ஜெட் மீதான இரண்டாவது நாள் விவாத கூட்டத்தொடர் நடந்து வருகிறது.

இந்நிலையில் பயன்பாட்டில் இல்லாத பழைய சட்டங்களை நீக்க மாநில சட்ட ஆணையம் மற்றும் மத்திய அரசு பரிந்துரைத்ததை ஏற்று பழைய சட்டங்களை  நீக்குவதற்கான மசோதாவை சட்டமன்றத்தில் அமைச்சர் சிவி சண்முகம் தாக்கல் செய்துள்ளார்.

அதன்படி, 1858 தமிழ்நாடு கட்டாய தொழிலாளர் சட்டம், தமிழ்நாடு கால்நடை நோய் சட்டம், 1961 தமிழ்நாடு வஃபு துணை சட்டம் உள்ளிட்ட சுமார் 80க்கும் அதிமான சட்டங்கள் நீக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்