சனாதனத்தை எதிர்ப்பவர்கள் திமுகவில் உள்ள சர்வாதிகாரத்தை எதிருங்கள்: தமிழிசை செளந்திரராஜன்..!

புதன், 6 செப்டம்பர் 2023 (20:33 IST)
சனாதனத்தை எதிர்க்கும் திமுகவினர் முதலில் உங்கள் கட்சியில் இருக்கும் சர்வாதிகாரத்தை எதிருங்கள் என புதுவை மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
 
திமுகவில்  வேறு ஒருவர் தலைவராக முடியுமா? வேறு ஒருவர் முதலமைச்சராக முடியுமா? சனாதனத்தை எதிர்ப்பவர்கள் முதலில் உங்கள் கட்சியில் உள்ள சர்வாதிகாரத்தை எதிருங்கள் 
 
உதயநிதியை விட நன்றாக உழைத்தவர்கள் யாருமே திமுகவில் இல்லையா? ஆனால் அவர்களை மட்டுமே பதவிக்கு வர முடிகிறது. ஆராசா கட்சியின் தலைவராக முடியுமா? மிகவும் அடித்தட்ட அடிமட்டத்தில் உள்ளவர்கள் உங்கள் கட்சியின் தலைவராகவோ முதலமைச்சராக ஆக முடியுமா?
 
 நான் கஷ்டப்பட்டு  மெடிக்கல் காலேஜ் சேர்ந்து படித்தேன். ஆனால் அதன் பெருமையை அவர் வேறு ஒருவருக்கு எடுத்துக் கொள்கிறார் என்றும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்