அமித்ஷா அமைச்சராக இருப்பதும், தமிழிசை ஆளுனராக இருப்பதும் எங்களால்தான்: ஆ ராசா

புதன், 6 செப்டம்பர் 2023 (12:01 IST)
அமித்ஷா அமைச்சராக இருப்பதற்கும் தமிழிசை ஆளுநராக இருப்பதற்கும் காரணம் நாங்கள் தான் என முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா பேசியுள்ளார். 
 
மோடி ,அமித்ஷா மற்றும் பாஜகவில் உள்ளவர்கள் அனைத்து அமைச்சர்களை விட வெள்ளைக்காரர்கள் நாணயமானவர்கள் மற்றும் யோக்கியமானவர்கள் என்று திமுக எம்பி ஆ ராசா தெரிவித்தார்.
 
சனாதனத்தை நாங்கள் அழித்த காரணத்தினால் தான் உள்துறை அமைச்சராக உள்ளார். இல்லை எனில் அவர் வேறு வேலைக்கு சென்று இருப்பார்.
 
அதேபோல் தமிழிசை ஆளுநரானது. அண்ணாமலை ஐபிஎஸ் ஆனது. வானதி சீனிவாசன் வழக்கறிஞரானது எல்லாமே எங்களால் தான் என்று திமுக எம்பி ஆ ராசா  பேசி உள்ளார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்