கவர்னர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு பிறந்தநாள் ... மு.க.ஸ்டாலின் வாழ்த்து

புதன், 2 ஜூன் 2021 (16:09 IST)
தெலுங்கானா கவர்னரும் , புதுசேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தராஜன் அவர்கள் இன்று 60 வது பிறந்தநாள் கொண்டாடுகிறார். அவருக்கு பிரபல தலைவர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக பாஜகவின் தலைவராக சில ஆண்டுகள் சிறப்புடன் பணியாற்றிய தமிழிசை சௌந்தரராஜன் அப்பணியைப் பொறுப்புடனும் சிறப்புடனும் செய்தார். அவரது தந்தையும் அவரது உறவினர்களும் காங்கிரஸில் முக்கிய தலைவர்ளாக இருக்கும்போது, இவர் மட்டும் பாஜகவின் இணைந்து பணியாற்றினார். அவரது உழைப்பு அவரை உயர்த்தியது. அதனால் பாஜக தலைமை அவரை கடந்த 2019 ஆம் ஆண்டு தெலுங்கானா மாநில கவர்னராக்கியது. தற்போது புதுச்சேரிமாநிலத்தின் துணைநிலை ஆளுநராகவும் பணியாற்றி வருகிறார்.  
 
 தமிழக முதல்வர் ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்து டுவீட் பதிவிட்டுள்ளார். அதில், தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான (பொ) திருமதி.  @DrTamilisaiGuvஅவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.  சகோதரி தமிழிசை சவுந்தரராசன் அவர்கள் பொதுவாழ்வில் மேலும் உயரங்களை அடைய வாழ்த்துகிறேன்!

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்