வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் பரவும் செய்திகளை நம்பி, அச்சத்துடன் இருக்கும் பொதுமக்கள், அப்பாவிகளை குழந்தை கடத்தல் கும்பல் எனக்கருதி பலரை அடித்துக்கொலை செய்யும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதுகுறித்துப் பேசிய தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், குழந்தை கடத்தல் விவகாரத்தில் பொதுமக்கள் அப்பாவி மக்களை அடித்து துன்புறுத்துவது தவறு என்று கூறியுள்ளார். ஒருசில விரும்பத்தகாத சம்பவங்களில் வட மாநில இளைஞர்கள் ஈடுபட்டதால், அனைத்து வட மாநிலத்தவர்களும் தவறானவர்கள் எனக் கருதக்கூடாது.
மேலும் மக்களுக்கு போலீஸ் மீதும், அரசு மீதும் நம்பிக்கை இல்லாத காரணத்தால் தான், அவர்கள் சட்டத்தை கையில் எடுக்கிறார்கள்.
எனவே போலீஸார் மக்களுக்கு உரிய விழிப்புணர்வு வழங்கி, இனி வரும் காலங்களில் மக்கள் வந்தந்திகளை நம்பி யாரையும் தாக்கா வண்ணம் நடவடிக்கை எடுக்குமாறு தமிழிசை சவுந்தரராஜன் போலீஸாருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.