தமிழக வெற்றி கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் குறித்த தேதியை, கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இதனால், கட்சி தொண்டர்களிடம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் மார்ச் 18 அன்று நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டம், விஜய் தலைமையில் திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்சன் மையத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த கூட்டத்தில் விஜய் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என கூறப்படுகிறது. குறிப்பாக, தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் குறித்த அறிவிப்பை அவர் வெளியிட அதிக வாய்ப்பு இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.